திருவாரூர் மாவட்டம் எட்டியலூர் பகுதியில் மண்டல வட்டாச்சியர் ராஜ. ராஜேந்திரன் தலைமையிலான தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த இரு சக்கரவாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், அதில் ஆவணமின்றி ரூ.2.15 லட்சம் பணம் எடுத்துச்செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள், அவற்றை கோட்டாட்சியர் பாலச்சந்திரனிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: உரிய ஆவணம் இருந்தும் ரூ. 22 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்