ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. இந்நிலையில் இந்த காப்பகம் அருகில் உள்ள வனப்பகுதியில் உள்ள யானைகள், கடந்த சில நாட்களாக சாலையோரத்தில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன.
இதை அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் படம் எடுக்கின்றனர். இதனால் அந்த யானைகள் ஆத்திரமடைந்து வாகன ஓட்டிகளை தாக்க முயற்சிப்பதால், சாலையில் சுற்றி திரியும் யானைகளை வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.