திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வக்கிராநல்லூர், சித்தனக்குடி, கோம்பூர் உள்ளிட்ட இடங்களில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது கூட்டத்தில் பெண் ஒருவர் தெரிவித்ததாவது, "வெள்ளையாற்றில் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
பின்னர் சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணன் கூறியதாவது, "திமுக ஆட்சி அமைந்தவுடன் மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். மணல் கொள்ளையர்கள் காவல்துறை பாதுகாப்புடன் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியளித்தார்.
தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற பேனரில் பொதுமக்கள் கையெழுத்திட்டனர்.
இதையும் படிங்க: கிராம சபைக்கு வந்தவர்களுக்கு ரூ.500 - முண்டியடிக்கும் மக்கள் வைரல் வீடியோ!