திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு தடுப்புப் பணியாளர்களைக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருத்துறைப்பூண்டி அருகே பெரியநாயகிபுரத்தில் மாவட்ட உதவி ஆட்சியர் கிஷோர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
வீடு வீடாகச் சென்று ஆய்வுசெய்த அவர், வீடுகளில் தண்ணீர் சேமித்து வைத்துள்ள பாத்திரங்கள், தொட்டிகள், குடங்கள், குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளிட்டவற்றில் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுப் புழுக்களின் உற்பத்தி உள்ளதா என்பதை பார்வையிட்டார். மேலும் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வையும் மக்களிடையே எடுத்துக் கூறினார்.
அந்தக் கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளர்கள் மூலம் நிலவேம்பு கசாயம் வழங்கிய அவர், பொதுமக்களிடம் டெங்கு தடுப்புப் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதையும் படியுங்க: ஆவடி அருகே மர்ம காய்ச்சலுக்கு ஏழு வயது சிறுவன் உயிரிழப்பு!