திருவாரூர்: தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜனவரி 2ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அதன் எதிரொலியாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் இரண்டு நாள்கள் தொடர்ந்து விடிய விடிய கனமழை பெய்து வருவதால் சம்பா நெற்பயிர்கள் மூழ்கும் நிலையில் உள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக நன்னிலம், ஆண்டிபந்தல், பேரளம், கொல்லுமாங்குடி, மன்னார்குடி, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் நிலத்தில் சாய்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதி மறுப்பு: குருஞ்சாக்குளம் கிராம மக்கள் உண்ணாவிரதம்!