திருவாரூர் மாவட்டத்தில் கோடைக் காலத்தில் பருத்தி சாகுபடி செய்வது விவசாயிகளின் வழக்கம். அந்த வகையில், இந்தாண்டும் மாவட்டம் முழுவதும் இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டிருந்தது. தற்போது பருத்தி எடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனையடுத்து, விவசாயிகள் எடுக்கும் பருத்தியை விற்பனை செய்வதற்கு மாவட்டம் முழுவதும் நான்கு ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் உள்ளன. இதில் திருவாரூரில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் எடுக்கப்படும். அரசின் சார்பில், ஒரு கிலோ 52 ரூபாயிலிருந்து 55 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
![விளைவிச்சாலும் போதாது போல...விற்பனைக்காக விடிய விடிய காத்திருக்கும் பருத்தி விவசாயிகள்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvr-05-cotton-salers-2km-wating-vehicle-vis-script-tn10029_29062020160426_2906f_01855_59.jpg)
இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பருத்தியை விற்பனை செய்வதற்காக நேற்று முன்தினம் (ஜூன்28) மாலை முதல் நேற்று (ஜூன்29) வரை காத்திருந்து பருத்தியை விவசாயிகள் விற்பனை செய்தனர்.
மேலும், தாங்கள் கடினப்பட்டு பருத்தியை விலைவித்து விற்பனைக்கு கொண்டு வந்தும், நல்ல விலையில்லை என்றும், இதனால் இந்தாண்டு தங்களுக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இதையும் படிங்க...திமுக எம்எல்ஏ குடும்பத்தினருக்கு கரோனா: மகள் திருமணத்தில் பரவியதா?