திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார் (33). இவர் சீனாவிலுள்ள ஷாங்காய் நகரில் சமையலராகப் பணியாற்றிவருகிறார். தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக கடந்த 31ஆம் தேதி சீனாவிலிருந்து சொந்த ஊரான திருவாரூர் திரும்பியுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு சளி தொந்தரவு இருந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பரவுவதன் அச்சத்தின் காரணமாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைப் பெற சென்றுள்ளார். அங்கு சோதனை மேற்கொண்டதையடுத்து, திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் தனி அறையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மேலும் இவரது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, சென்னை கிண்டியில் உள்ள சோதனை மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் அச்சத்தில் அரசு மருத்துவமனைகள் இயங்கிவரும் நிலையில் அங்குள்ள ஊழியர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள உரிய முகக்கவசம் இல்லை எனவும், தட்டுப்பாடு இருப்பதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: மலேசியாவிலிருந்து சென்னை வந்த சீனப் பயணிக்கு கரோனா பாதிப்பு