உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் கோவிட்-19 பெருந்தொற்று தமிழ்நாட்டில் இரண்டாம்கட்ட நிலை அடைந்திருக்கிறது. இதுவரை ஆயிரத்து 323 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 15 பேர் உயிரிழந்தனர் எனத் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முழுமையான 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிகம் பாதிக்கப்பட்டதாக சிவப்பு குறியீடு மாவட்டங்கள் தீவிர கண்காணிப்புக்குள்படுத்தப்பட்டுள்ளன.
நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இதன் தாக்கத்தைத் தடுக்கும்நோக்கில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கடந்த மார்ச் 24ஆம் தேதி சமய மாநாட்டில் பங்கேற்றுவந்த திருவாரூர், நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 150 பேருக்கு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தனர்.
திருவாரூரைச் சேர்ந்த அந்த 16 பேருடன், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 24 பேருக்கும் கோவிட்-19 பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், சிவப்பு குறியீடு மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கோவிட்-19 பெருந்தொற்று நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாகத் திருவாரூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள குறிப்பில், “திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது. வலங்கைமான் பகுதியைச் சேர்ந்த மூன்று பேருக்கும், கோட்டூர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் திருத்துறைப்பூண்டி நெடும்பலம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் இந்தத் தொற்றின் தாக்கம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 21 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கரோனா தொற்றிலிருந்து திருவாரூர் பகுதியைச் சேர்ந்த 7 பேர் குணமடைந்தவர்கள். அனைவரும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டு மருத்துவக் குழுவினரின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் திருவாரூர் பகுதி முழுவதும் பொதுமக்கள் மத்தியிலும், காவல் துறையினர் மத்தியிலும் மிகுந்த பரபரப்பும் அச்சமும் நிலவிவருகிறது. இதன் காரணமாக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரக்கூடிய புறநோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து காணப்படுகிறது.
இதையும் படிங்க : விவசாயிகளின் பாதிப்பிற்கேற்ப இழப்பீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்