இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து கடந்த 24ஆம் தேதி நள்ளிரவு முதல் அடுத்த 21 நாட்களுக்கு மத்திய அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்.
வீட்டு வாடகை, கடன் உள்ளிட்டவற்றிற்கு மாநில அரசு கால அவகாசம் அறிவித்துள்ளது. மேலும் ஓட்டுநர்கள், தினக்கூலிகளுக்கு சிறப்பு நிவாரண நிதியை அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்ட கட்டட தொழிலாளர் சங்கத் தலைவர் விஜயராகவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, "தமிழ்நாடு அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய், ரேஷன் பொருட்களும், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியார்களுக்கு சிறப்பு நிவாரண நிதியும் வழங்க உள்ளது. இந்த அறிவிப்பில் கட்டட தொழிலாளர்கள் இல்லை, ஆகவே எங்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு சிறப்பு நிவாரண நிதியை அறிவிக்க வேண்டும்", என்றார்.
இதையும் படிங்க: ஊரடங்கு மீறல்: இறைச்சிக் கடைகளுக்கு வட்டாட்சியர் சீல்