ETV Bharat / state

ஓரிரு நாளில் குடிமராமத்து பணி தொடங்கும் - அமைச்சர் காமராஜ் - corona_relief meterial distributed by minister kamaraj

திருவாரூர்: தமிழ்நாடு முழுவதும் குடிமராமத்து பணிகள் இன்னும் ஓரிரு நாள்களில் தொடங்கப்படும் என்று மாநில உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

உணவுத்துறை அமைச்சர் காமராஜ்
உணவுத்துறை அமைச்சர் காமராஜ்
author img

By

Published : May 10, 2020, 2:22 PM IST

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பினை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்.

நிவாரணப் பொருள்கள் வழங்கும் அமைச்சர்
நிவாரணப் பொருள்கள் வழங்கும் அமைச்சர்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர்; "திருவாரூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 32 பேரில் மூன்று பேர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் கட்டுபாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்த பகுதிகள் அனைத்தும், ஒவ்வொன்றாக தடை நீக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் தூர்வாரும் பணி நடத்துவதற்கு ஏதுவாக நாளைய தினம் டெண்டர் விடப்படும். அதுபோல குடிமராமத்து பணிகள் இன்னும் ஓரிரு நாளில் தொடங்கப்படும்.

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ்

விவசாயிகளுக்கு, டிராக்டர் உள்ளிட்ட விவசாய உபகரணங்கள் வழங்கும் பணி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தாண்டு இதுவரை 22 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில், 28 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த காலங்களில் இல்லாத மிகப்பெரிய சாதனை அளவாக இருக்கும்" என தெரிவித்தார்.

இதையும் பார்க்க: கரோனா வைரஸ் உலகளாவிய நிலவரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.