ETV Bharat / state

திருவாரூரில் காவலர்கள் உள்பட 68 பேருக்கு கரோனா

திருவாரூர்: இரண்டு காவலர்கள் உள்பட மேலும் 68 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா
கரோனா
author img

By

Published : Aug 25, 2020, 3:08 PM IST

திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

குறிப்பாக நன்னிலம், குடவாசல், திருவாரூர் நகர் பகுதி உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் தொற்று பரவி வருகிறது.

நேற்று (ஆகஸ்ட் 24) வரை திருவாரூர் மாவட்டத்தில் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 896 ஆக இருந்து. இன்று (ஆகஸ்ட் 25) மேலும் 68 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 964 ஆக உயர்ந்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் மனைவி எட்டு வயது மகள் உள்ளிட்ட மூன்று நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் திருவாரூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசியில் பணியாற்றி வருகிறார் இவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இரண்டு காவலர்கள் உள்பட 68 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நன்னிலம் திருவாரூர் நகர் பகுதி உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் நோய்தொற்று பரவி வருவதால் அந்த பகுதிகள் அனைத்தும் சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.