திருவாரூர் மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் சுகாதாரத்துறை மூலம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும் குடும்பம் குடும்பமாக தொற்று பரவி வருகிறது.
குறிப்பாக நன்னிலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் நன்னிலம் பேரூராட்சி அலுவலர் ராஜசேகர் முன்னிலையில் வர்த்தக சங்கத்தினரின் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் ஒரு மனதாக நன்னிலம் பேரூராட்சிக்குட்பட்ட ஆண்டிபந்தல், மாப்பிள்ளைகுப்பம், சன்னாநல்லூர், மணவாளம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் முழு பொது முடக்கம் இன்று (ஆக.24) முதல் மூன்று நாள்கள் கடைபிடிக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது.
இதனால் அனைத்து வர்த்தக சங்கத்தினர் கடைகளை அடைத்ததால் நன்னிலம் கடைத் தெரு முழுவதும் வெறிச்சோடி மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது.
இதையடுத்து நன்னிலம் தேசியமயமாக்கப்பட்ட வங்கி மேலாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வங்கி மூடப்பட்டது. மேலும், அந்தப் பகுதி முழுவதும் சுகாதாரத்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் யாரும் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
நன்னிலம் பகுதிகளில் கரோனா தொற்று அதிகரிப்பு! - நன்னிலம் பேரூராட்சி
திருவாரூர்: நன்னிலம் பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் மூன்று நாள்களுக்கு முழு பொது முடக்கத்தை நன்னிலம் பேரூராட்சி அறிவித்துள்ளது.