திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணார்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நன்னிலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஹரி கிருஷ்ணன், புவியரசன், சின்னசாமி ஆகியோர் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, சுகாதாரம் குறித்து பேசப்பட்டது. அதற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், கல்லூரி முதல்வர் ராமானுஜம் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ராஜேஸ்வரன், இளைஞர் செஞ்சிலுவை ஒருங்கிணைப்பாளர் சரவணன், பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: நன்னிலம் அருகே பிரிட்ஜ் வெடித்து முதியவர் உயிரிழப்பு!