திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த நெடுவாக்கோட்டை காளாஞ்சிமேடு பகுதியில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் மதுபான கடையின் பின்புறம், பாண்டிச்சேரி மாநில மது பாட்டில்களை தமிழ்நாட்டு மது பாட்டில்களாக மாற்றி விற்பனை செய்து வருவதாக மதுவிலக்கு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் மதுவிலக்கு ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையிலான காவல்துறையினர் மதுபான கடையில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வெளிமாநில மது பாட்டில்களை தமிழ்நாட்டு மதுபாட்டில்களாக மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ராம்குமார்(25), விஜய்(22) மற்றும் மதுபான பார் உரிமையாளர் ஸ்ரீதர், இடத்தின் உரிமையாளர் ஆசைத்தம்பி உள்ளிட்டோரை கைது செய்து அவர்களிடமிருந்து 10 ஆயிரம் மதுபாட்டில்கள் கொண்ட 250க்கும் மேற்பட்ட அட்டை பெட்டிகளைப் பறிமுதல் செய்தனர். மேலும் இதற்காக பயன்படுத்திய இரண்டு கார்கள் மற்றும் ஒரு லோடு ஆட்டோவையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மொத்த மதிப்பு 10 லட்சம் ரூபாய் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:நாமக்கல் ஐ.டி. ரெய்டு - மாணவர்களிடம் முறைகேடாக வசூலித்த ரூ. 30 கோடி பறிமுதல்!