ETV Bharat / state

எல்.ஐ.சி.யை தனியாருக்கு தாரை வார்ப்பதா? : ஊழியர்கள் காட்டம் - எல்.ஐ.சி ஊழியர்கள் காட்டம்

திருவாரூர்: மத்திய பட்ஜெட்டில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு கொடுப்பது குறித்த அறிவிப்பை கண்டித்து, எல்.ஐ.சி. ஊழியர்கள் போராட்டம் நடத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

budget LIC staff reaction
எல்.ஐ.சி நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்ப்பது கண்டிக்கதக்கது
author img

By

Published : Feb 2, 2020, 10:57 AM IST

Updated : Feb 2, 2020, 11:14 AM IST

2020 - 21ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் விவசாயம், தனிநபர் வருமான வரி, பொதுத்துறை நிறுவனங்கள் சார்ந்து பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

அதில் எல்.ஐ.சி. எனப்படும் ஆயுள் காப்பீடு நிறுவனத்தில் உள்ள மத்திய அரசின் முதலீடுகள் திரும்பப் பெறப்படும் எனவும், அதன் பங்குகள் பொதுமக்களுக்கு விற்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்.ஐ.சி. நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்ப்பது கண்டிக்கதக்கது - எல்.ஐ.சி ஊழியர்கள் காட்டம்

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திருவாரூர் எல்.ஐ.சி. ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த செந்தில் குமார் கூறுகையில், “அதிகமான பாலிசிதாரர்களையும், கோடிகணக்கான நிதிகளைக் கொண்டு வெகுஜன மக்களின் நன்மதிப்போடு, நல்ல முறையில் இயங்கிவரும் எல்.ஐ.சி. நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்ப்பது என்பது கண்டிக்கதக்கது. இதனைக் கண்டித்து ஒரு மணி நேரம் சேவை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம்.

இந்நிறுவனமும், மக்களின் பணமும் பாதுக்காக்கப்பட வேண்டும். இதன் அடிப்படையில் வரும் காலங்களில் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார்.

Intro:

Body:எல்.ஐ.சி நிறுவனத்தை தனியார்க்கு தாரை வார்ப்பது கண்டிக்கதக்கது, எல்.ஐ.சி ஊழியர்கள் காட்டம்

2020-21ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் விவசாயம், தனிநபர் வருமான வரி, பொதுதுறை நிறுவனங்கள் சார்ந்து பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அவவகையில் எல்.ஐ.சி எனப்படும் ஆயுள் காப்பீடு நிறுவனத்தில் உள்ள மத்திய அரசின் முதலீடு திரும்ப பெறப்படும். அதன் பங்குகள் பொதுமக்களுக்கு விற்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு எதிர் கட்சிகள், பொதுமக்கள், என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதிகமான பாலிஸிஸ்தாரர்களையும், கோடிக்கான நிதிகளை கொண்டு வெகுஜன மக்களின் நன்மதிப்போடு நல்ல முறையில் இயங்கி வரும் எல்.ஐ.சி நிறுவனத்தை தனியார்ர்க்கு தாரை வார்ப்பது என்பது கண்டிக்கதக்கது. இதனை கண்டித்து ஒரு மணி நேரம் சேவை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும், மேலும் இந்நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும்,
மக்களின் பணம் பாதுக்காக்கப்பட வேண்டும், என்ற அடிப்படையில் வரும் காலங்களை மக்களை திரட்டியும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எல்.ஐ.சி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

பேட்டி
செந்தில் குமார்
எல்.ஐ.சி ஊழியர் சங்கம்

Conclusion:
Last Updated : Feb 2, 2020, 11:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.