திருவாரூர்: நன்னிலம் அருகே கொல்லாபுரம் ஜீவாநகர் கிராமத்தில், சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக் கிராமத்தின் அருகே புதுவை அம்பகரத்தூர், தமிழ்நாடு எல்லையான சங்கமங்கலத்தை இணைக்கும் சாலை செல்கிறது.
தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் இச்சாலையின் ஓரத்தில், கொல்லாபுரம் ஊராட்சியில் உள்ள அனைத்து குப்பைகள், மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுகிறது. இதனால் சுவாச நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் இறைச்சிக் கழிவுகள், மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் பைகள் போன்றவை எரிக்கப்படுவதால் தூர்நாற்றத்தோடு வரும் காற்றை மக்கள் சுவாசித்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
எனவே கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு மாற்று இடத்தில் குப்பை கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஆவடியில் ராணுவ வீரர் தற்கொலை