ETV Bharat / state

பேனர் வைத்தால் கைது செய்வீர்களா?- நீதிபதி கண்டனம்

திருவாரூர்: சட்டவிரோத மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறிய காவல்துறையை கண்டித்து பேனர் வைத்த இளைஞரை கைது செய்த காவல்துறைக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பேனர்
author img

By

Published : Jul 9, 2019, 8:08 PM IST

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட தேவர்கண்ட நல்லூரில் செயல்பட்டு வந்த அரசுக்குச் சொந்தமான டாஸ்மாக் மதுபான கடை அப்பகுதி மக்களின் தொடர் போராட்டங்களால் 2017ஆம் ஆண்டு மூடப்பட்டது.

இந்நிலையில் தேவர்கண்ட நல்லூர் அருகே உள்ள உச்சி மேடு பகுதியைச் சேர்ந்த சிலர் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் அப்பகுதி இளைஞர்கள் மது பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாகவும், அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதாகவும் மக்கள் வேதனையடைந்தனர்.

பேனர்

சமீபத்தில் சட்டவிரோத மதுவை வாங்கி குடித்து இரு சக்கர வாகனத்தில் சென்ற மாதவன்,சுரேஷ், பிரவின் ஆகிய மூன்று இளைஞர்கள் மீது லாரி மோதியதில் மாதவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், பல முறை புகார் அளித்தும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையையும், தமிழ்நாடு அரசையும் கண்டிக்கும் விதமாக அப்பகுதி இளைஞர்கள் "இது தமிழ்நாடா? குடிகார நாடா?", என்ற வாசகம் எழுதப்பட்ட பேனர் ஒன்றை தேவர்கண்ட நல்லூர் கடைத்தெருவில் வைத்துள்ளனர்.

இது தொடர்பாக செல்லபாண்டியன், மணிகண்டன் என்ற இரு இளைஞர்களை கொரடாச்சேரி காவல்துறையினர் கைது செய்ததோடு பேனரையும் அகற்றினர். இதில் செல்லபாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்து நன்னிலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீசன் "மதுபான கடைக்கு எதிராகப் பேனர் வைப்பது சட்டவிரோத செயலா?", என காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பியதோடு கண்டனமும் தெரிவித்துச் செல்லப்பாண்டியனை அவரது சொந்த ஜாமீனில் விடுதலை செய்தார்.

Intro:Body:திருவாரூர் அருகே சட்டவிரோத மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறிய காவல்துறையை கண்டித்து பேனர் வைத்த இளைஞரை கைது செய்த காவல்துறைக்கு நீதிபதி கண்டனம் தொிவித்து ஜாமினில் விடுவித்தார்.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட தேவர்
கண்டநல்லுரில் செயல்பட்டு வந்த அரசுக்கு சொந்தமான டாஸ்மார்க் மதுபானகடை அப்பகுதி மக்களின் தொடர் போராட்டங்களால் 2017ம் ஆண்டு மூடப்பட்டது. இந்நிலையில் தேவர் கண்டநல்லூர் அருகே உள்ள உச்சி மேடு பகுதியை சேர்ந்த சிலர் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால்
இப்பகுதி இளைஞர்கள் மது பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாகவும், இதனால்
இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதாகவும் சமீபத்தில்
சட்டவிரோத மதுவை வாங்கி குடித்து இரு சக்கர வாகனத்தில் சென்ற மாதவன்,
சுரேஷ், பிரவின் ஆகிய மூன்று இளைஞர்கள் மீது லாரி மோதியதில் மாதவன் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில்
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகின்றனர். பல முறை புகார் அளித்தும் சட்டவிரோதமாக மது விற்பனை
செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையையும் தமிழக அரசையும்
கண்டிக்கும் விதமாக அப்பகுதி இளைஞர்கள் இது தமிழ் நாடா குடிகார நாடா என்ற
வாசகம் எழுதபட்ட பேனர் ஒன்றை தேவர் கண்டநல்லூர் கடைத்தெருவில்
வைத்துள்ளனர். இது தொடர்பாக  செல்லபாண்யன், மணிகண்டன் இரு இளைஞர்களை
கொரடாச்சேரி காவல்துறையினர் கைது செய்ததோடு பேனரையும் அகற்றினர் .இதில்
செல்ல பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்து நன்னிலம் நீதிமன்றத்தில்
நீதிபதி ஜெகதீசன் முன்பு ஆஜர்படுத்திய போது மதுபானகடைக்கு எதிராக பேனர்
வைப்பது சட்டவிரோத செயலா என காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பியதோடு
கண்டனமும் தெரிவித்து செல்லப்பாண்டியனை அவரது சொந்த ஜாமினில் விடுதலை
செய்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.