ETV Bharat / state

விவசாய நிலத்தில் எண்ணெய்க் கிணறு அமைக்க முயற்சி: கிராம மக்கள் எதிர்ப்பு - கிராம மக்கள் ஆர்பாட்டம்

திருவாரூர்: கோட்டூர் அருகே ஓஎன்ஜிசி புதிய எண்ணெய்க்கிணறு அமைப்பதைக் கண்டித்தும், கிராம மக்களைக் கொச்சைப்படுத்தி பேசிய விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியனைக் கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்பாட்டத்தில்  கிராம மக்கள்
ஆர்பாட்டத்தில் கிராம மக்கள்
author img

By

Published : Feb 27, 2020, 11:30 PM IST

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே புழுதிக்குடி ஊராட்சி சோழங்க நல்லூர் கிராமத்தில் கடந்த வருடம் ஜூலை மாதம் 7ஆம் தேதி ஓஎன்ஜிசி சார்பில் புதிய எண்ணெய் துரப்பன கிணறு அமைக்கும் பணிகள் தொடங்கின. தங்களுடைய பகுதியில் புதிய கிணறு அமைக்கக் கூடாது என ஆரம்பத்திலிருந்து விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

ஆர்பாட்டத்தில் கிராம மக்கள்

இதில் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பிளான்டில் ராட்சச இயந்திரங்கள் மூலம் பூமிக்கடியில் சுமார் 3500 மீட்டர் ஆழத்திற்கு துரப்பனம் அமைக்க துளையிடும் பணிகள் தொடங்கின. மேலும், ஆறு மாத காலத்திற்குள் இப்பணிகள் முடிக்கப்பட்டு, இந்தக் கிணறு மூலம் எண்ணெய், எரிவாயு எடுக்கும் பணிகள் தொடங்கும் என ஓஎன்ஜிசி சார்பில் திட்டமிட்டிருந்தது.

அதனைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, சில விவசாய சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகள் சார்பில், புதிய பிளான்ட் முன்பு பலகட்ட போராட்டங்கள் நடைபெற்றுவந்தது.

இந்தப் புதிய பிளான்ட் அமைந்துள்ள புழுதிக்குடி கிராம மக்கள் சார்பில், ராஜ்பாலன் என்பவர் தலைமையில், சோழங்கநல்லூரில் ஒஎன்ஜிசி சார்பில் புதிதாக அமைக்கப்பட்டு ஹைட்ரோகார்பன் கிணற்றை மூட வலியுறுத்தியும், கிராம மக்களின் தன்னெழுச்சி போராட்டங்களைக் கொச்சைப்படுத்தும் விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியனை கண்டித்தும், ஹைட்ரோகார்பன் எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் புதிய பிளான்ட் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: ஓய்வுபெறும் நேரத்தில் கையூட்டு பெற்று கைதான சமூகநலத் துறை விரிவாக்க அலுவலர்!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.