திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடி கடைவீதியில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம்., மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஏ.டி.எம். இயந்திரத்தை நேற்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இரும்பு கடப்பாரை கம்பியை பயன்படுத்தி உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார்.
அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து சப்தமிட்டனர். இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார்.
இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், தடயவியல் நிபுணர்கள் துணையுடன் ஆய்வு மேற்கொண்டனர் .
மேலும் கொள்ளையில் ஈடுபட்ட நபரின் இருசக்கர வாகனம், அவர் பயன்படுத்திய கடப்பாரை உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காவல் உதவி ஆய்வாளர் உறவினர் வீட்டில் கொள்ளை!