நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் நேற்று திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விவசாயிகள், அப்போது தொழிலாளர்கள், மாணவர்களுக்கென எந்தவித சலுகையும், சாதகமான அறிவிப்புகளும் இல்லை என குற்றம் சாட்டினர்.
மேலும், இந்த நிதிநிலை அறிக்கையானது, பெரு நிறுவனங்களுக்கு சாதகமாகவும், செல்வந்தர்களை மேலும் செல்வந்தராக்கும் அறிக்கை என்றும் கண்டனம் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் கலந்துகொண்டு, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.