ETV Bharat / state

4 மாவட்டங்களில் 5079 சாமி சிலைகள் ஆய்வு! - தியாகராஜர் கோயில்

திருவாரூர்: 4 மாவட்டங்களில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 5079 சாமி சிலைகளின் உண்மைத் தன்மை குறித்த அறிக்கை விரைவில் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தொல்லியல் நிபுணர்கள் மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தொல்லியல் நிபுணர்கள் மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர்
author img

By

Published : Apr 10, 2019, 7:16 PM IST

தமிழ்நாட்டில் உள்ள சில கோயில்களின் சாமி சிலைகள் காணாமல் போனது குறித்தும், ஆலயங்களில் உள்ள சிலைகள் உண்மையானவையா என்பது குறித்து தொல்லியல் நிபுணர்கள் மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

அதனடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தியாகராஜர் கோயிலின் உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சிலைகளின் உண்மை தன்மை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆய்வு பணியானது தொடங்கிப்பட்டது.

ஏழு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு பணி இன்று முடிவடைந்துள்ளது.

இதுகுறித்து தொல்லியல் துறை தென் மண்டல இயக்குனர் நம்பிராஜன் தெரிவித்ததாவது, 'உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிலைகளின் உண்மைத்தன்மை, பாதுகாப்பு குறித்தும் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த பணியில் 5079 சிலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் சிலைகளின் உண்மைத் தன்மை குறித்தும் அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.' என தெரிவித்தார்.

தியாகராஜர் கோயிலில் சிலைகள் ஆய்வு

Intro:திருவாரூரில் உள்ள தியாகராஜ சுவாமி கோயில் சிலைகளின் உண்மைத்தன்மை குறித்து ஏழு கட்டங்களாக நடைபெற்று வந்த ஆய்வு பணியானது இன்றுடன் முடிவடைந்ததாக தொல்லியல் துறை தென் மண்டல இயக்குனர் நம்பிராஜன் பேட்டி.

Body:திருவாரூரில் உள்ள தியாகராஜ சுவாமி கோயில் சிலைகளின் உண்மைத்தன்மை குறித்து ஏழு கட்டங்களாக நடைபெற்று வந்த ஆய்வு பணியானது இன்றுடன் முடிவடைந்ததாக தொல்லியல் துறை தென் மண்டல இயக்குனர் நம்பிராஜன் பேட்டி.

தமிழகம் முழுவதும் கோவில்களில் உள்ள சாமி சிலைகள் காணாமல் போனது குறித்தும் ஆலயங்களில் உள்ள சிலைகள் உண்மையானவையா என்பது குறித்து தொல்லியல் நிபுணர்கள் மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதனடிப்படையில் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் திருவாரூர், தஞ்சாவூர்,நாகப்பட்டினம்,கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த சிலைகளின் உண்மை தன்மை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் தொல்லியல் துறை சார்பில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஆய்வு பணியானது தொடங்கியது.
ஏழு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு பணிகளானது இன்றுடன் முடிவடைந்துள்ளது.

இதுகுறித்து தொல்லியல் துறை தென் மண்டல இயக்குனர் நம்பிராஜன் தெரிவித்ததாவது...

உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிலைகளின் உண்மைத்தன்மை குறித்தும், பாதுகாப்பு குறித்தும் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி திருக்கோயில் ஏழு கட்டங்களா நடைபெற்ற வந்த ஆய்வு பணியாது இன்றுடன் நிறைவடைந்ததுள்ளது.
இந்த பணியில் 5079 சிலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் சிலைகளின் பாதுகாப்பு குறித்தும் அதன் உண்மைத் தன்மை குறித்தும் அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.