கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசின் சட்டத்தை மீறி பொதுமக்கள் அத்தியவசியப் பொருள்கள் வாங்குவதற்காக கடைக்கு வருகிறோம் என இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பொதுவெளியில் சுற்றித் திரிந்த வண்ணம் உள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் 12 பேருக்கு கரோனா வைரஸ் உறுதிசெய்யபட்டுள்ளது. இதனைத் தொடரந்தும் பொதுமக்கள் வெளியே சுற்றிக்கொண்டிருப்பது அலுவலர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
எனவே நகர்ப்புறங்களில் உள்ள கடை உரிமையாளர்களுக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்து விரைவாக பொருள்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் 144 தடை உத்தரவை மீறி வெளியே சுற்றித்திரியும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வெளிமாநிலத் தொழிலாளர்களின் விவரங்களைச் சேகரிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு!