திருவண்ணாமலை மாவட்டத்தின் ஊத்தங்கரையில் இருந்து அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, ஒட்டகுடிசல் பகுதி அருகே அந்தப் பேருந்தில் பயணம் செய்த பிகார் இளைஞர்களுக்கு இடையே பணம் பிரிப்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டு இருவரும் மாறி மாறி திராவகம் (ஆசிட்) வீசிக் கொண்டனர். உடனே பேருந்து ஓட்டுநர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இந்தச் சண்டையின்போது பேருந்தில் அமர்ந்திருந்த இரண்டு பயணிகள் மீது திராவகம் பட்டது. அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினரின் விசாரணையில், “சண்டையில் ஈடுபட்ட இளைஞர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சாந்தகுமார், சோனுகுமார் என்பதும் கடந்த 15 நாள்களாக அரக்கோணம், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் பழைய பொருள்களை வாங்கி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், “பேருந்தில் இருவரும் பணத்தை சமமாக பிரிக்கும்போது சண்டை ஏற்பட்டது. குடிபோதையில் இருவரும் இருந்ததால் திராவகம் வீசி சண்டையிட்டுக் கொண்டனர் என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 200 ரூபாய்க்கு ஏற்பட்ட தகராறு...ஒருவர் உயிரிழப்பு