ETV Bharat / state

வீடியோவிற்காக கிணற்றில் குதித்த இளைஞர்; நீச்சல் தெரியாததால் பலியான சோகம்!

வீடியோ எடுப்பதற்காக நீச்சல் தெரியாமல் கிணற்றில் குதித்த இளைஞர் பலியான சம்பவம் திருவண்ணாமலை அருகே கரிப்பூரில் நடந்து உள்ளது.

youth jumped into a well to take a video without know to swim and died near Chetpet in Tiruvannamalai
நீச்சல் தெரியாமல் வீடியோ எடுக்க கிணற்றில் குதித்த இளைஞர் பலி
author img

By

Published : Jun 25, 2023, 12:46 PM IST

நீச்சல் தெரியாமல் வீடியோ எடுக்க கிணற்றில் குதித்த இளைஞர் பலி

திருவண்ணாமலை: சேத்துப்பட்டு அருகே கரிப்பூர் கிராமத்தில் கோயில் விழாவிற்காக கிணற்றில் குதிப்பதை வீடியோ எடுக்க கிணற்றில் குதித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

சேத்துப்பட்டு அடுத்த கரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர், ஏழுமலை. இவர் சென்னையில் கட்டட மேஸ்திரி ஆக வேலை செய்து வருகிறார். இவருக்கு சச்சின் (வயது 21), சரண் (வயது 19) என இரண்டு மகன்கள் உள்ளனர். ஏழுமலை தனது கிராமத்தில் நடைபெறும் குலதெய்வ விழாவிற்காக முன்னதாக ஊருக்கு வந்துவிட்டார்.

இவருடைய இரண்டாவது மகன் சரண் தனியார் மருந்து கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சரணும் அவரது நண்பர் ரமேஷ் என இருவரும் கோயில் விழாவிற்காக கரிப்பூருக்கு வந்தனர். சரண் தன்னுடைய நண்பன் ரமேஷிடம் ஊரில் பஸ் விட்டு இறங்கியதும் நேராக தங்களுடைய விவசாய நிலத்துக்குச் சென்று, ''நான் கிணற்றில் எகிறி குதிப்பதை வீடியோ எடு, இதை ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவற்றில் போடலாம்'' எனக் கூறி உள்ளார்.

இதையும் படிங்க: மீனாட்சி கோயிலைச் சுற்றியுள்ள விடுதிகளில் தங்குவோரை கண்காணிக்க மென்பொருள் - காவல் துறை அறிமுகம்

இதனை அடுத்து சரண் கிணற்றில் குதித்து உள்ளார். சரணுக்கு சரியாக நீச்சல் தெரியாத காரணத்தால் மூச்சுத் திணறி தத்தளிப்பதைக் கண்டு ரமேஷ் அலறி கூச்சல் போட்டு உள்ளார். அருகே நூறு நாள் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது சரண் உடல் கிணற்றில் மூழ்கியது.

பின்னர் இது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் மற்றும் எட்டு பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். கிணற்றில் தண்ணீர் அதிகம் இருந்ததால் நான்கு மோட்டார்களை வைத்து கிணற்றில் இருந்த நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

ஆறு மணி நேர முயற்சிக்குப் பின்னர் கிணற்றில் இருந்து நீர் வெளியேற்றப்பட்ட பின்னர் சரணின் உடலை வெளியே எடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்த சேத்துப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். கிராம மக்கள் ஒன்று கூடி சரவணன் உடலை உடற்கூராய்விற்கு அனுப்ப மறுத்தனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுவாக செல்ஃபி மற்றும் சமூக வலைதளங்களில் போடுவதற்காக வீடியோ எடுக்கும் மனநிலை இளைஞர்களிடம் அதிகரித்து வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், உயிருக்கு ஆபத்தான நீச்சல், வாகனம் ஓட்டும் பணிகளின்போது செல்ஃபி மற்றும் வீடியோ எடுப்பது ஆகியவற்றைத் தவிர்க்கவேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: சிதம்பரம் நடராஜர் கோவிலில் மனநலம் பாதித்த பக்தரை தாக்கிய தீட்சிதர்கள் - சிசிடிவி வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.