திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா பெரியார் சாலையை சேர்ந்த பெண் ஒருவருக்கும், வரதராஜூக்கும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு விக்னேஷ், சண்முகம் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களுடன் வரதராஜன் தாயார் முத்தம்மாளும் வசித்து வருகிறார்.
இந்நிலையில், வரதராஜனுக்கும், அப்பெண்ணுக்கும், அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் வரதராஜன் வரதட்சனை கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் அப்பெண்ணுக்கு உடன் பணியாற்றும், ஜெய்சங்கர் என்பவரும், அவரின் சித்தப்பாவும் பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மனமுடைந்த அப்பெண் தனது குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: சிக்கன் பக்கோடா வியாபாரி கொலை வழக்கு- 7 பேர் கைது