ETV Bharat / state

தரக்குறைவாக நடத்திய காவல் துறையினர்; சிறையில் விஷமருந்தி பெண் தற்கொலை!

திருவண்ணாமலை: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண், காவல் துறையினர் தன்னை அவமானப்படுத்தியதாகக் கூறி சிறையிலேயே விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Jul 14, 2020, 1:08 PM IST

death
death

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது சகோதரர் ஆறுமுகம். இவர்கள் இருவருக்குமிடையே நிலத் தகராறு இருந்துவந்துள்ளது. இந்நிலையில், ஆறுமுகம் தனது அடியாட்களுடன் தர்மலிங்கம், அவரது குடும்பத்தினரை அரிவாளால் வெட்ட முயற்சி செய்துள்ளார். இதில் தர்மலிங்கம் ஆறுமுகத்தை தடுத்தபோது ஆறுமுகத்திற்கு வெட்டுக்காயம் ஏற்பட்டு மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், ஆறுமுகம் கொடுத்த புகாரின்பேரில் மேல்செங்கம் காவல் துறையினர் தலைமறைவான தர்மலிங்கத்தை தேடிவந்தனர். தர்மலிங்கம் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது வீட்டிற்குச் சென்ற காவல் துறையினர், அவரது மனைவி சுதர்சனா, மகன் விஜயகுமாரிடம் தர்மலிங்கம் குறித்து விசாரித்தனர். தகவல் ஏதும் கிடைக்காததால், விஜயகுமாரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

தர்மலிங்கத்தை தேடிப்பார்த்த சுதர்சனா, எங்கும் கிடைக்காததால் காவல் நிலையத்திற்குச் சென்று தனது மகன் விஜயகுமாரை மீட்கச் சென்றுள்ளார். அங்கு காவல் துறையினர் அவரைத் தரக்குறைவாக நடத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், மகனை மீட்கச் சென்ற தாயையும் காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான சுதர்சனா சிறையிலேயே விஷமருந்தி ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து மருத்துவமனை முன்பு குவிந்த அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆறுமுகம், சிவபெருமாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், சுதர்சனாவை தற்கொலைக்குத் தூண்டிய காவல் உதவி ஆய்வாளர் மணிவண்ணன், ஆய்வாளர் மலர், காவல் கண்காணிப்பாளர் சின்னராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மேலும், சுதர்சனாவின் உடலை வாங்க மறுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அங்கு 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: முதலமைச்சர் பழனிசாமிக்கு கரோனா இல்லை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.