திருவண்ணாமலை: வேட்டவலத்தில் அரிமா சங்கத்தின் சார்பில் 1500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளின் போதைப்பொருள் பயன்பாடு தடுத்தல் விழிப்புணர்வு பேரணியை இன்று (ஆக.18) சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
வேட்டவலம் காந்தி சிலை முன் ஆரம்பித்த இப்பேரணியில் மாணவர்கள் போதைப்பொருள் குறித்தும், போதைப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும் போதைப்பொருள் தடுப்பு குறித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், பள்ளி மாணவ-மாணவிகள் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்த கலை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், வட்டாட்சியர் சர்க்கரை, உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கோவை மற்றும் திருப்பூர் பல நகரங்களுக்கு முன்மாதிரியாக உள்ளன... கர்நாடகா முதலமைச்சர்