திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் காவல் நிலைத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி எந்த ஒரு அத்தியாவசியப் பொருள்கள் தேவையின்றி இரு சக்கர வாகனங்களில் சுற்றி திரிந்தவர்கள் மீது மங்கலம் காவல் உதவி ஆய்வாளர் சத்தியானந்தன் தலைமையில் வழக்குப்பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
![பறிமுதல் செய்த வாகனங்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvm-02-twowheeler-handover-vis-7203277_17042020143547_1704f_1587114347_716.png)
இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திருப்பி கொடுக்க அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து இன்று முதல் வாகனங்களின் உரிமையாளர்களை வரவைத்து வாகனங்கள் திருப்பி வழங்கப்பட்டு வருகிறது.
வாகன ஓட்டிகள் ஆர்சி புத்தகம், இன்சூரன்ஸ், ஓட்டுநர் உரிமம், வசிப்பிடச் சான்று உள்ளிட்டவைகள் கொண்டுவந்து சமர்பித்த பின் சமூக இடைவெளி பின்பற்றி அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி உறுதிமொழி பத்திரத்தில் கையொப்பம் வாங்கப்பட்டு பின்பு வாகனங்கள் திருப்பி கொடுக்கப்பட்டன.
இதையும் படிங்க: கேரளத்துக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கிய வெளிமாநில கூலித் தொழிலாளி!