திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு அருகே அல்லிகொண்டபட்டு என்ற இடத்தில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் இருதயபுரம் கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை, ஜான் பீட்டர் மற்றும் சாணார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சிவா என மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், வள்ளிமலை கிராமத்தை சேர்ந்த முரளி என்பவர் படுகாயங்களுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த தச்சம்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, இரண்டு இருசக்கர வாகனங்களும் அதி வேகத்தில் வந்து மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக அருகில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.
இதையும் படிங்க: ஊத்தாப்பம் கேட்டு கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள்!