ETV Bharat / state

அரசுப்பள்ளியில் சாதிப்பாகுபாட்டால் மாணவனை அடித்த இரண்டு ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

ஆரணி அருகே அரசுப்பள்ளியில் சாதிப்பாகுபாடு காரணமாக, பதினொன்றாம் வகுப்பு மாணவனை அடித்த 2 ஆசிரியர்களை மாவட்ட கல்வி அலுவலர் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்தார்.

author img

By

Published : Sep 23, 2022, 8:12 PM IST

Etv Bharatஅரசு பள்ளியில் சாதி பாகுபாட்டால் மாணவனை அடித்த இரண்டு ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 700-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும் இந்த பள்ளிக்கு சேவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மாணவர்கள் வருகின்றனர்.

இந்நிலையில் சேவூர் பகுதியைச்சேர்ந்த மாணவர் ஒருவர், அப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். அந்த மாணவனை சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆங்கில ஆசிரியர் திலீப் குமார், இயற்பியல் ஆசிரியர் வெங்கட்ராமன் ஆகிய அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு காரணங்களை சொல்லியும் சாதிப்பாகுபாடு பார்த்தும் மாணவனை அடித்ததாக கூறப்படுகிறது.

அரசுப்பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம்: பின்னர் அடிபட்ட மாணவன் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். மேலும் மாணவனை தாக்கிய அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் காவல்துறையினர் அந்தப்பகுதியில் குவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நபர்களை அழைத்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னர் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, ஆரணி மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ் குமார், ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மாணவனின் பெற்றோரிடம் நடந்தது என்னவென்று விசாரணை நடத்திப் பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் முற்றுகையிட்ட நபர்கள் கலைந்து சென்றனர்.

ஆசிரியர் குறித்து புகார் அளிக்க புகார் பெட்டி: மேலும் மாணவனின் பெற்றோர் தன்னுடைய மகனை சாதி பாகுப்பாடு காரணமாக 2 ஆசிரியர்கள் தாக்கியதாக கொடுத்தப்புகாரின் அடிப்படையில், ஆரணி கல்வி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வகுப்பறையில் உள்ள ஒவ்வொரு பள்ளி மாணவர்களிடமும் புகார் பெட்டி மூலம் அந்தந்த ஆசிரியர்களின் செயல்பாடு குறித்து புகார் அளிக்கலாம் எனப் புகார் பெட்டி வைத்தனர்.

பின்னர் புகார் பெட்டியில் மாணவர்கள் தங்களுடைய கருத்துகளை எழுத்துப்பூர்வமாக எழுதிப்புகார் பெட்டியில் செலுத்தினர். பின்னர் புகார் பெட்டிகளை பெற்றுக்கொண்ட கல்வி அலுவலர்கள், மாணவர்கள் அளித்த பதில்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர். மேலும் இந்த பதற்றமான சூழ்நிலையால் பள்ளியில் ஆரணியில் இருந்த காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.

ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்த கல்வி அலுவலர்: மேலும் இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ் குமார் பள்ளி மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் ஆங்கில ஆசிரியர் திலீப் குமார், இயற்பியல் ஆசிரியர் வெங்கட்ராமன் ஆகிய இருவரும் பள்ளிமாணவர்களை சாதிப்பாகுபாடு காரணமாக திட்டுவது, அடிப்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது தெரியவந்தது. அதனையடுத்து இரண்டு ஆசிரியர்களையும் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்களே சாதிப்பாகுபாடு காண்பித்து பள்ளி மாணவர்களை தாக்கிய சம்பவம் பெற்றோர்கள் இடத்திலும் பொதுமக்களிடத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:தொடரும் மாணவர்களின் 'புட்போர்டு' பயணம் - நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.