ETV Bharat / state

மாணவரை கடுமையாக தாக்கும் சக மாணவர்கள்! - அதிர்ச்சி! - பள்ளி மாணவர்கள்

திருவண்ணாமலை: பள்ளி மாணவர் ஒருவரை மற்ற இரு மாணவர்கள் கடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

clash
clash
author img

By

Published : Feb 23, 2021, 12:26 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், சீருடையில் இருக்கும் ஒரு மாணவரை, மற்ற இரு மாணவர்கள் சரமாரியாக தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பெற்றோரிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அப்பகுதியில் விசாரித்த போது, பள்ளி மாணவர்கள் தாக்கிக்கொள்வது என்பது தொடர்கதையாகி வருவதாகத் தெரிவித்தனர். இது தொடர்பாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருட்செல்வம் தெரிவித்தார். மேலும், வருங்காலங்களில் இதுபோன்று மாணவர்களிடையே பிரச்சனை ஏற்படாமல் இருக்க அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பள்ளி மாணவரை கடுமையாக தாக்கும் இரு மாணவர்கள்! - அதிர்ச்சி!

மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட இப்பிரச்சனை குறித்து கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலையத்திற்கு அந்த பள்ளியின் தலைமையாசிரியர் புகார் தெரிவித்ததாகவும், மாணவர்களின் நலன் கருதி காவல்துறையினர் பெற்றோரை அழைத்துப் பேசி, மாணவர்களும் சமாதானமாக செல்வதாக சொன்னதையடுத்து அறிவுறுத்தி அனுப்பியதாக காவல்துறை தரப்பில் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணத்தைக் கொள்ளையடிக்க முயற்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.