திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கஞ்சா வியாபாரி சேதுபதி (29), கள்ளச்சாராயம் வியாபாரி சாந்தி. இவர்கள் மீது காவல் துறையினர் பலமுறை நடவடிக்கை எடுத்தும், தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் இவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய அனுமதி வழங்கும்படி மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் தெரிவித்தார்.
அதற்கு மாவட்ட ஆட்சியரும் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி சேதுபதி, சாந்தி ஆகிய இருவரை காவல் துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், இந்த ஆண்டில் மட்டும் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட வந்த 106 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புதுக்கோட்டையில் ரூ.27 லட்சம் மதிப்புடைய கஞ்சா பறிமுதல்!