திருவண்ணாமலையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை போக்குவரத்து மண்டல தலைமை அலுவலகம் வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனே நடத்த வேண்டும், 240 நாள்கள் பணி முடித்த அனைத்துப் போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும், விடுப்பு விதிகளை மீறி இரட்டிப்பு பணி வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தொமுச பேரவைச் செயலாளர் சௌந்தர்ராஜன், சிஐடியு சம்மேளன பொருளாளர் சசிக்குமார் உள்ளிட்டடோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க...ஈ டிவி பாரத் செய்தி எதிரொலி: கருணை இல்லத்துக்கு கிடைத்த அரசின் கருணை!