திருவண்ணாமலை மாவட்டத்தில் காமராஜர் சிலை, திருவள்ளுவர் சிலை, அண்ணா சிலை, ரவுண்டானா வேங்கிக்கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, ஹெச்எம்எஸ், எல்பிஎஃப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, இலவச மின்சாரம் ரத்து, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை ஆகியவற்றைக் கைவிட வலியுறுத்தியும், பாஜக, மோடி அரசின், மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
தொழிலாளர் சட்டங்களை நீக்குவது, வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிப்பது, காப்பீடு வங்கி மற்றும் ரயில்வே துறையை தனியார்மயமாக்குவது, அன்னிய முதலீட்டை அதிகரிப்பது, வேலைநிறுத்தம், சம்பளக் குறைப்பு உள்ளிட்டவற்றைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மாதம் 7 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க வேண்டும், மருத்துவர்கள், செவிலியர், தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.