திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மகாராஷ்டிரவிலிருந்து வந்த நான்கு பேர், சென்னையிலிருந்து வந்த நான்கு பேர், விசாகப்பட்டினத்திலிருந்து வந்த ஒருவர், திருவண்ணாமலை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த இரண்டு பேர் என மொத்தம் 11 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சென்னையிலிருந்து 3 ஆயிரத்து 354 பேர், மற்ற மாவட்டங்களிலிருந்து ஆயிரத்து 185 பேர், வெளி மாநிலங்களில் இருந்து 5 ஆயிரத்து 479 பேர் என மொத்தம் 10 ஆயிரத்து 18 பேர் திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், செங்கம், தண்டராம்பட்டு, ஆரணி, போளூர், கலசபாக்கம், ஜமுனாமுத்தூர், செய்யார், வந்தவாசி, சேத்துப்பட்டு, வெம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி முதல் மே 20ஆம் தேதி வரை வெளியூர்களிலிருந்தவர்கள் சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.
திருவண்ணாமலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 182ஆக உயர்வு - திருவண்ணாமலை கரோனா விவரம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 11பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 182ஆக உயர்ந்துள்ளது.