ETV Bharat / state

பயணியை தள்ளிவிட்ட அரசு பேருந்து நடத்துனர் சஸ்பெண்ட்! - விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் மதுபோதையில் இருந்த பயணியை கீழே தள்ளிவிட்ட அரசு பேருந்து நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பயணியை தள்ளிவிட்ட அரசு பேருந்து நடத்துனர் சஸ்பெண்ட்!

author img

By

Published : Nov 20, 2022, 2:30 PM IST

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி - செய்யாறு சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் பிரகாஷ் என்பவர் தடம் எண் 477 பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த பேருந்து வந்தவாசியில் இருந்து திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வழியாக பெங்களூருவுக்கு இயக்கப்படுகிறது. நேற்று இந்த பேருந்து பெங்களூருவில் இருந்து வந்தவாசி திரும்பியபோது ஒரு பயணி மது போதையில் இருந்துள்ளார்.

அந்த நபர் பேருந்தில் இருந்து தள்ளாடியபடி இறங்கியுள்ளார். அப்போது பின்னால் இருந்து தண்ணீரை ஊற்றிய பிரகாஷ் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து அவரை கீழே தள்ளிவிட்டார்.

இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அதனைத் தொடர்ந்து நடத்துனரின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்ததோடு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இந்நிலையில், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக மண்டல இயக்குனர் ஜோசப், நடத்துனர் பிரகாஷை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பயணியை தள்ளிவிட்ட அரசு பேருந்து நடத்துனர் - வைரலாகும் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.