திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இரும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தனசேகரன் (46). இவரும், இவரது மனைவி கண்ணகியும் நேற்றிரவு(ஏப்ரல்.15) தோட்டத்திற்கு சென்றுள்ளனர்.
இன்று(ஏப்ரல்.16) அதிகாலை தனசேகரன் வீட்டிற்கு சென்று போது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 60 சவரன் நகைகள், 500 கிராம் வெள்ளி, 15 ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது.
வீட்டில் பொருத்தப்பட்டிருந்த 4 சிசிடிவி கேமராக்களும் உடைக்கப்பட்டு இருந்தன. இதுதொடர்பான புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: எங்ககிட்டயே காசு கேட்குறியா...பேக்கரியை அடித்து நெறுக்கிய இளைஞர்கள்!