திருவண்ணாமலை நகரில் அமைந்துள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பங்குனி மாதத்தில் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
ஆனால், தற்போது கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் வருவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கோயிலில் அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்தில் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க மாலை மாற்றிக்கொண்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன.
இதையும் படிங்க:திருத்தணி முருகன் கோயிலில் வள்ளியம்மை திருக்கல்யாணம்