ETV Bharat / state

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
author img

By

Published : Nov 27, 2022, 8:58 AM IST

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று (நவ. 27) அதிகாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று தொடங்கி வருகின்ற டிசம்பர் 6 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநில மற்றும் வெளி நாடுகளிலிருந்து 40 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்தினை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் கொடிமரம் அருகே எழுந்தருளினர். அதிகாலை 5.30 மணியளவில் தொடங்கி சிவாச்சாரியார்கள் வேத மந்திரம், முழங்க பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என முழக்கமிட கோயிலில் உள்ள 63 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

இந்த கொடியேற்ற விழாவில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், இணை ஆணையார் அசோக்குமார், காமெடி நடிகர் மயில்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனை தொடந்து 10 நாட்கள் காலையின் விநாயகர், சந்திரசேகரர் மற்றும் இரவில் பஞ்சமூர்த்திகளின் மாடவீதியுலா நடைபெறும். டிசம்பர் 6 ஆம் தேதி அதிகாலையில் கோயிலின் கருவரையின் முன்பாக பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

இதையும் படிங்க: திருக்கார்த்திகை தீபத் திருவிழா: விநாயகர், சண்டிகேஸ்வரர் சுவாமிகள் வீதிஉலா...

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.