நினைத்தாலே முக்தி தரும் பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமாக விளங்கக் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் சித்ரா பெளர்ணமி கிரிவலம் உலகப்பிரசித்தி பெற்றது, சுமார் 20 லட்சம் பக்தர்கள் சித்ரா பெளர்ணமி அன்று மட்டும் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை தரிசிப்பது வழக்கம்.
அதன்படி, இன்று இரவு சித்ரா பௌர்ணமி தொடங்கி நாளை இரவு வரை பௌர்ணமி கிரிவலம் வருவதற்கு உகந்த நேரம் ஆகும். ஆனால், கரோனா நோய்த் தொற்றை தடுக்கும் விதமாக சித்ரா பெளர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அறிவித்துள்ளார்.
![chitirai pournami girivalam path empty tiruvannamalai திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயில் சித்ரா பெளர்ணமி கிரிவலம் Thiruvannamalai Girivalam Thiruvannamalai arunachaleswarar temple arunachaleswarar temple](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7094406_tvm.jpg)
எனவே கிரிவலப்பாதை முழுவதும் பக்தர்கள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று பல்வேறு விதமான மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிவாச்சாரியர்கள் வேதமந்திரம் முழங்க தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிவாச்சாரியார்கள் மட்டுமே பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பௌர்ணமி கிரிவலம் செல்ல தடை: காவல் துறையினர் ரோந்து