ETV Bharat / state

மலைவாழ் சிறுவர்கள் கல்வி பயில உந்துதலாக நிற்கும் ஆசிரியை - tribals education

மலைவாழ் சிறுவர்களின் கல்வி மேம்பாட்டிற்கும் அவர்கள் வாழ்க்கையை மேம்படுவதற்கும் அயராது உழைத்துவரும் பள்ளியின் தலைமை ஆசிரியை ஒருவர் பற்றிய சிறப்பு தொகுப்பு...

thiruvannamalai-a-woman-teacher-works-hard-for-the-upliftment-in-javadhu-malai-tribals-education
மலைவாழ் சிறுவர்கள் கல்விப் பயல உந்துதலாக நிற்கும் ஆசிரியை
author img

By

Published : Mar 8, 2020, 8:53 PM IST

Updated : Mar 9, 2020, 10:43 PM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாதுமலையில் வாழும் பழங்குடியின மலைவாழ் மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்தபோது, கல்வியில் மிகவும் பின்னடைவில் இருந்தனர். கல்வி விழிப்புணர்வின்றி மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் போவது, பெண் குழந்தைகளை இளம் வயதில் திருமணம் செய்து வைப்பது என ஜவ்வாதுமலையில் அதிக அளவில் குழந்தை திருமணங்களும் நடைபெற்று வந்தது.

மலைவாழ் மக்களின் நிலைமையை அறிந்த ஆசிரியை சிலம்பி என்பவரும் அவரது கணவர் அர்சுணனும் ஜவ்வாதுமலையில் உள்ள குனிகாந்தூர் கிராமத்தில் ஜவ்வாதுமாலை வாழ் மக்கள் கிராம வளர்ச்சி நிறுவனத்தை தொடங்கி, அங்கு தேன் வளர்ப்பு, கூடை பின்னுதல் போன்ற தொழிற் பயிற்சிகளை வழங்கி அம்மக்களுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வழிவகை செய்து கொடுத்தனர். பின்னர் மலை பகுதியில் உள்ள குக்கிராமங்களில் குழுக்கள் அமைத்து கல்வியின் அவசியம் குறித்து எடுத்துரைத்ததின் விளைவாக 1991ஆம் ஆண்டு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஒரு சிறிய பள்ளியினை ஆரம்பித்தனர். முதலில் 26 குழந்தைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளியில் இரண்டு ஆண்டுகளில் 200 சிறுவர்களைச் சேர்ந்த ஜவ்வாதுமலை பள்ளியானது 1993ஆம் ஆண்டில் 10 வகுப்பு வரை உயர்நிலைப்பள்ளியாகவும், 1996ஆம் ஆண்டில் மேல்நிலைப்பள்ளியாகவும் உயர்ந்தது. தற்போது இப்பள்ளி 2 ஆயிரத்து 500 மாணவ, மாணவியர்கள் படிக்கும் அளவிற்கு உயரந்துள்ளது.

மலைவாழ் சிறுவர்கள் கல்விப் பயல உந்துதலாக நிற்கும் ஆசிரியை

இதுகுறித்து இப்பள்ளியின் தலைமை ஆசிரியை சிலம்பி,

"1993ஆம் ஆண்டில் இருந்து இதுவரை தொடர்ந்து 26 ஆண்டுகள் பத்தாம் வகுப்பு தேர்வில் நூறு விழுக்காடு தேர்ச்சியும், 1996ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 23ஆண்டுகள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் நூறு விழுக்காடு தேர்ச்சியும் பெற்று மலைவாழ் மக்கள் மேல்நிலைப்பள்ளி சாதனைகள் படைத்து வருகிறது.

கல்வியில் ஜவ்வாதுமலை 0.2 விழுக்காடாக இருந்த நிலை, இப்பள்ளி ஆரம்பிக்கப்பட்ட பிறகு தற்போது 35 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இப்பள்ளியில் மேல்நிலை வகுப்பு பயின்ற மாணவர்கள் சென்னை மாநில கல்லூரியில் முதுகலை பட்டங்களும், கால்நடை மருத்துவம், பல் மருத்துவம், மீன்வளக் கல்வி, பொறியியல் கல்லூரிகளிலும் உயர் கல்வி பயின்று வருகிறார்கள்" என்று மிக பெருமிதத்துடன் கூறுகிறார்.

இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் ஆசிரியர் பணிக்கும், அதிக அளவில் காவல்துறை பணிக்கும், தீயணைப்பு துறை பணிக்கும் சென்று நாட்டிற்கு சேவையாற்றியும் வருகிறார்கள். இந்தப் பள்ளியின் கல்வி சேவையைப் பாராட்டி மத்திய அரசு ராஜீவ் சிரோன்மணி விருதும், தமிழ்நாடு அரசு காந்தி விருதும் வழங்கியது. இந்தாண்டு ஜனவரியில் தமிழ்நாடு அரசு அம்பேத்கர் விருது வழங்கியும், இதேபோன்று பல வெளிநாட்டு நிறுவனங்களும் பல்வேறு விருதுகளை வழங்கியும் பாராட்டியுள்ளது.

ஜவ்வாதுமலையில் உள்ள குக்கிராமங்களில் சாலை வசதி முழுமையாக இல்லாததாலும், கிராமங்களுக்கு பேருந்து வசதிகளும் இல்லாத நிலை உள்ளதாலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டுமானால் பத்து கிலோ மீட்டரில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரம் வரை அடர்ந்த காடுகளின் வழியாக நடந்து செல்ல வேண்டும். இதனால் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி இந்த மலைவாழ் மக்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தனித்தனியான விடுதி வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு, அத்துடன் சத்தான உணவுகளும், மருத்துவ வசதிகளும் வழங்கப்படுவதால் மாணவ, மாணவியர்கள் உற்சாகமாக கல்வி பயின்று சாதனைகளை படைத்து வருகிறார்கள். இந்த மலைவாழ் மக்கள் மத்தியில் அதிக அளவில் நடைபெறும் குழந்தை திருமணங்களை நடைபெறாத வண்ணம் பெண்களுக்கு கல்வி விழிப்புணர்வு வழங்கியதில் தலைமை ஆசிரியை சிலம்பிக்கு அதிக பங்குள்ளது.

இந்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் இயங்கும் கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்தியாலயா உண்டு உறைவிடப்பள்ளிகள் ஜவ்வாதுமலையில் நான்கு செயல்பட்டு வருகிறது. இதில் இரண்டு பள்ளிகளை தலைமை ஆசிரியை சிலம்பி பொறுப்பெற்று பள்ளிக்கு செல்லாத சிறுவர்களையும், பள்ளி இடைநின்ற சிறுவர்களையும் கண்டறிந்து அவர்களை அழைத்து வந்து மூன்று ஆண்டுகளில் 6, 7, 8ஆம் வகுப்புகளுக்கான பாடங்களை கற்பித்து அதன் பின்னர் முறையான பள்ளியில் 9ஆம் வகுப்பில் சேர்வதற்கு உதவுகிறார். கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் ஆயிரம் மாணவிகளை இப்படி கண்டறிந்து அவர்களுக்கு சிலம்பி கல்வி கற்பித்துள்ளார்.

மேலும் பள்ளியில் சேகரிக்கப்படும் மரத்தின் சருகுகளை கொண்டு மண்புழு உரம் தயாரித்து, தோட்டங்களை வைத்து பராமரித்து வருகிறார், இந்தத் தோட்டத்தில் அதிக அளவில் காப்பி மரங்களை வைத்து அதில் கிடைக்கும் காப்பி கொட்டைகளை அரைத்து மாணவர்களுக்கு காப்பியும் வழங்கப்பட்டு வருகிறது. உலக அளவில் மகளிர் தினத்தை கொண்டாடிவரும் வேளையில், பழங்குடியின மலைவாழ் மக்களுக்கு குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு சேவை மனப்பான்மையுடன் கல்விச்சேவை ஆற்றிவரும் தலைமை ஆசிரியை சிலம்பியின் இப்பணியைப் பாராட்டுவது சிறப்பானதாகும்.

இதையும் படிக்கும்: 'போராட்டங்களில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் விருது கிடையாது' - அரசு

Last Updated : Mar 9, 2020, 10:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.