திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்காலிலுள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் மின்வாரியத்தில் காலியாக உள்ள கேங்மேன் பணிகளுக்கான உடற்தகுதி பரிசோதனை ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த தகுதித் தேர்வை, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
உடற்தகுதி தேர்வில் பங்கு பெறுபவர்கள் மின்கம்பத்தில் ஏறி உடற் தகுதியை நிரூபிக்க வேண்டும். மேலும், மின் வாரிய பணியாளர்கள் மாவட்ட ஆட்சியருக்குச் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தபோது, திடீரென மின்கம்பி பணியாளரின் கையிலிருந்து விலகி மாவட்ட ஆட்சியர் மீது பட்டதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இப்பணியைப் பெறுவதற்கு ஏராளமான இளைஞர்கள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆடிட்டர் குருமூர்த்தியின் கனவு நிறைவேறாது - அமைச்சர் கே.சி.கருப்பணன்