திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று வரை கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,009ஆக இருந்தது.
இந்நிலையில், சென்னையிலிருந்து வந்த 22 பேர், காஞ்சிபுரம், திருவள்ளூரிலிருந்து வந்த தலா இருவர், பெங்களூருவிலிருந்து வந்த ஒருவர், மருத்துவப் பணியாளர்கள் மூன்று பேர், நோயாளியுடன் தொடர்பிலிருந்த 15 பேர், புறநோயாளிகள் பிரிவிலிருந்த 29 பேர் என இன்று ஒரே நாளில் 77 பேருக்கு நொய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
![கிருமி நாசினி தெளிக்கும் பணி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvm-03-corona-spreads-script-7203277_21062020145116_2106f_1592731276_196.png)
இவர்கள் கலசபாக்கம், செங்கம், எஸ்வி நகரம், போளூர், வந்தவாசி, தச்சூர், ஆக்கூர், வேட்டவலம், பெரணமல்லூர், தெள்ளார், நாவல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். அனைவரும் திருவண்ணாமலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
![வெறிச்சோடி காணப்படும் தெருக்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvm-03-corona-spreads-script-7203277_21062020145116_2106f_1592731276_57.png)