ETV Bharat / state

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள் குண்டர் சட்டத்தில் கைது! - குண்டாஸ் சட்டத்தின் கீழ் சிறை

திருவண்ணாமலை: கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

gundas
gundas
author img

By

Published : Aug 18, 2020, 12:14 AM IST

திருவண்ணாமலை மாவட்டம், அன்னை இந்திரா நகரைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் வேல்முருகன் (36). இவர் கடந்த 8ஆம் தேதி எடப்பாளையம் ஏரிக்கரையில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை பின்தொடர்ந்து வந்த விஜயகுமார், மணிகண்டன் என்ற இருவரும் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் 3ஆயிரத்து 200 ரூபாயை வழிப்பறி செய்தனர்.

பணத்தை பறிகொடுத்த வேல்முருகன், திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதனடிப்படையில், வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர், நீதிமன்ற காவலில் அடைத்தனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் வேலூர் மத்திய சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், இந்த ஆண்டில் மட்டும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 82 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தென்னக ரயில்வே பணிக்கு வெறும் 17 தமிழர்கள் தேர்வு... தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.