திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2,876 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்கும் இயந்திரங்களை அனுப்பும் பணிகள் இன்று (மார்ச் 10) தொடங்கியது.
முதற்கட்டமாக ஒவ்வொரு தொகுதிக்கும் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரிக்கப்பட்டு, அவை அனைத்தும் அனைத்துக் கட்சி அரசியல் பிரமுகர்களின் முன்னிலையில் சரிபார்க்கும் பணிகள் இன்று தொடங்கியது.
மாவட்டத்தில் பொதுமக்கள் வாக்களிக்கும்விதமாக 2,876 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இணையவழியின் மூலம் மாற்றுத்திறனாளிகள், வாய் பேச முடியாதவர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் காணொலி காட்சியின் மூலம் விளக்கும்வகையில், மாற்றுத் திறனாளிகளுக்கான 24 மணிநேரம் இயங்கும் மாற்றுத் திறனாளிகள் தேர்தல் கட்டுப்பாட்டு அறையையும் மாவட்டத் தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி திறந்துவைத்தார்.
இதையும் படிங்க:100% வாக்குப்பதிவு: தர்மபுரியில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்