ETV Bharat / state

விபத்துக்குள்ளாகி சாலையோரம் கேட்பாரற்றுக் கிடக்கும் லாரி - பொதுமக்கள் அச்சம்! - கன்டெய்னர் லாரி

திருவண்ணாமலை: செங்கம் அருகே விபத்துக்குள்ளான கன்டெய்னர் லாரி சாலையோரம் கேட்பாரற்றுக் கிடைப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திவுள்ளது.

the-roadside-container-that-crashed-in-accident

author img

By

Published : Mar 8, 2020, 11:41 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதூர் மாரியம்மன் கோயில் அருகே கன்டெய்னர் லாரி ஒன்று எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளாகி, சாலையோரம் நின்று கேட்பாரற்று இருப்பதாக, அப்பகுதி மக்கள் புதுப்பாளையம் காவல்துறையினருக்குத் தகவலளித்துள்ளனர்.

தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த புதுப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் லதா, விபத்துக்குள்ளான கன்டெய்னர் லாரி எங்கிருந்து வந்தது? யாருக்குச் சொந்தமானது? கன்டெய்னர் லாரியில் என்ன உள்ளது? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்டெய்னர் லாரியில் இருக்கும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு காவல் துறையினர் விசாரித்தபோது, அதில் உள்ள தொலைபேசியில் பேசிய நபர் கன்டெய்னர் லாரியை விற்று விட்டதாகவும் அதற்கும் அவர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

விபத்துக்குள்ளாகி சாலையோரம் கேட்பாரற்றுக் கிடக்கும் கன்டெய்னர்

இதுவரையிலும் விபத்து ஏற்படுத்திய கன்டெய்னர் லாரி உரிமையாளரும், ஓட்டுநரும் காவல்நிலையத்தில் புகார் கொடுக்காதது ஏன்? என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கன்டெய்னர் லாரியில் கொண்டு வந்த பொருள் என்னவென்று காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ரூ. 2 கோடி மதிப்புள்ள அரசுக்குச் சொந்தமான நிலம் மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.