ETV Bharat / state

திருவண்ணாமலை மகா தீபத்துக்கு பிளாக் டிக்கெட் விற்ற நபர் யார்? - Thiruvannamalai news

திருவண்ணாமலை அண்ணமலையார் கோயிலின் மகா தீபத்துக்கு 2,000 ரூபாய்க்கு டிக்கெட் விற்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவண்ணாமலை மகா தீபத்துக்கு பிளாக் டிக்கெட் விற்ற நபர் யார்?

author img

By

Published : Dec 7, 2022, 6:24 PM IST

திருவண்ணாமலை: உலகப்பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் நேற்று (டிச.6) அதிகாலை அண்ணாமலையார் கோயில் கருவறை முன்பாக பரணி தீபமும், மாலை 6 மணியளவில் கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது. இதனைக் காண்பதற்காக பிற மாவட்டம், மாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து சுமார் 35 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்தனர். இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதி என்ற நிலை இருந்து வந்தது.

மேலும் கட்டளைதாரர்கள் மற்றும் உபயதாரர்கள் ஆகியோர்களுக்கு மட்டும்தான் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இலவச அனுமதிச்சீட்டு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தனர். ஆனால், கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு விதமாக கோயிலுக்குள் நுழையும் அனுமதிச்சீட்டு அச்சிடப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒரு வகையான அனுமதிச்சீட்டு அச்சிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அட்டை வடிவில் கட்டளைதாரர்கள் மற்றும் உபயதாரர்கள் என பரணி தீபம் மற்றும் மகா தீபத்திற்கு தனித்தனியாக பாஸ் என்று சொல்லக்கூடிய நுழைவுச்சீட்டும் அச்சிடப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த நுழைவுச்சீட்டு எவ்வளவு எண்ணிக்கையில் அச்சிடப்பட்டுள்ளது என்பது மர்மமாகவே உள்ளது. ஏனெனில் திருவண்ணாமலை நகரத்தில் வசிக்கும் மக்களுக்கு பரணி தீபம் மற்றும் மகா தீபத்திற்கு உண்டான அனுமதிச்சீட்டு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணமலையார் கோயிலின் மகா தீபத்துக்கு 2,000 ரூபாய்க்கு டிக்கெட் விற்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

இந்த நிலையில் பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் அனுமதிச்சீட்டை வழங்காமல், இளைஞர் ஒருவர் பெரிய தெருவில் சாலையில் நின்று கொண்டு பரணி தீபம் மற்றும் மகா தீபத்திற்கான அனுமதிச்சீட்டை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்துள்ளார்.

உள்ளூரில் இருக்கும் தங்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்காமல், அனுமதிச்சீட்டு அறவே இல்லை என்று தெரிவித்த கோயில் நிர்வாகம், அந்த இளைஞருக்கு தற்காலிக பணியாளர் என்ற அடையாள அட்டை வழங்கி பரணி தீபம் மற்றும் மகா தீபத்திற்கான அனுமதிச்சீட்டு விற்பனை செய்தது எவ்வாறு எனவும், இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் விசாரணை செய்து எவ்வளவு எண்ணிக்கையில் கட்டளைதாரர்கள் மற்றும் உபயதாரர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பாஸ் பிரிண்ட் செய்தது என்ற வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் பல ஆண்டுகளாக நாளிதழ் மற்றும் தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பரணி தீபம் மற்றும் மகா தீபத்திற்கு உண்டான அனுமதிச்சீட்டு வழங்கப்படும்.

ஆனால், இந்த ஆண்டு முறையாக செய்தியாளர்களுக்குக்கூட வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த இளைஞர் அனுமதிச்சீட்டு விற்பனை செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திருவண்ணாமலை தீபம்: மலையேற பாஸ் முடிந்ததால் பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.