திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியிலுள்ள சுமார் 167 கூட்டுறவு கடைகளுக்கு மின்னணு விற்பனை இயந்திரம் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது. இதனை கூட்டுறவு விற்பனையாளர்களுக்கு நேரடியாகச் சென்று வழங்காமல் செங்கம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் அலுவலகத்திற்கு அனைவரும் ஒரே நேரத்தில் வரவழைக்கப்பட்டனர்.
ஆனால், பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமல் வந்தனர். மேலும் அவர்களுக்கு கிருமி நாசினி வழங்கப்படாமல் கூட்டம் ஏற்பாடு செய்து மொத்தமாக அவர்களுக்கு மின்னணு இயந்திரம் வழங்கப்பட்டது
கரோனா நோய் தொற்று பரவும் வகையில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிர்வாகம் செயல்படுவதாக பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டினர். மேலும், தினந்தோறும் கரோனாவல் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அரசு அலுவலங்களில் கிருமி நாசினி தெளித்து குறைந்த நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் கூட்டம் ஏற்பாடு செய்து அவர்களுக்கு மின்னணு விற்பனை இயந்திரம் வழங்கப்பட்ட நிகழ்ச்சி செங்கம் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.