திருவண்ணாமலையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையின் சாலை பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் சண்முகராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வருகிற டிசம்பர் மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் சேலத்தில் 7ஆவது மாநில மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது.
மேலும் 41மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும், சீருடை சலவை படி, விபத்து படி, சைக்கிள் படி வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க: சாலையை சீரமைக்க கோரி போராட்டம் - சமாதானத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்