திருவண்ணாமலை கிரிவலப் பாதையிலுள்ள வனப்பகுதியில் ஏராளமான மான்கள் உள்ளன. கோடை காலத்தில் குடிநீர் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்கு மான்கள், அவ்வவ்போது நாய்களிடம் சிக்கி உயிரிழந்து வருகின்றன. இந்தநிலையில், திருவண்ணாமலை 10 ஆவது புது வாணியம் குளத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பெரியநாயகி சமேத பெரியாண்டவர் ஆலயத்திற்குள், புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி தஞ்சமடைந்தது.
கோயிலுக்குள் வந்த மான் ரத்த காயங்களுடன் வந்ததைப் பார்த்த கோயில் நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து கோயிலுக்கு வந்த வனத்துறையினர் நாய்கள் கடித்ததால் தான் மானுக்கு காயங்கள் ஏற்பட்டதாகக்கூறி, முதலுதவி அளித்தனர். இருப்பினும் சிறிது நேரத்தில் சிகிச்சைப் பலனின்றி மான் பரிதாபமாக உயிரிழந்தது.